வீதியில் அமந்திருந்த நபர் மீது மகிழுந்தை ஏற்றி கொலை!!

வீதியில் அமந்திருந்த நபர் மீது மகிழுந்தை ஏற்றி கொலைசெய்துவிட்டு தப்பியோடிய நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று புதன்கிழமை அதிகாலை 4 மணி அளவில்,பிரான்ஸ்   Fontainebleau இல் (Seine-et-Marne) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 57 வயதுடைய நபர் ஒருவர் வீதியின் நடுவில் அமர்ந்துள்ளார். வேகமாக வந்த மகிழுந்து, நிறுத்தப்படாமல் நேரே குறித்த நபரை மோதி எறிந்துள்ளது. இந்த சம்பவத்தில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார். மகிழுந்தை ஓட்டிச்சென்ற சாரதி, மகிழுந்தை நிறுத்தாமல் ஓடித்தப்பியுள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் அருகில் இருந்த வணிக வளாகத்தின் கண்காணிப்பு கமராவில் பதிவாகியிருந்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

அதைத் தொடர்ந்து, இன்று வியாழக்கிழமை காலை குறித்த 27 வயதுடைய சாரதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ‘கொலை மற்றும் கொலையை மறைத்தல்’ பிரிவுகளில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Sharing is caring!