வீதியில் வீசப்பட்டிருந்த நிலையில், இரண்டரை மாத பெண் சிசு

மட்டக்களப்பு – கிரான் பகுதியில் வீதியில் வீசப்பட்டிருந்த நிலையில், இரண்டரை மாத பெண் சிசு பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சிசுவை சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், தமக்குக் கிடைத்த தகவலொன்றையடுத்து, கிரான் முருகன் கோவில் வீதிப்பகுதியில் இருந்து நேற்றிரவு சிசு மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, நேற்றிரவு 10 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் சிசு வீசப்பட்டிருக்கலாம் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Sharing is caring!