வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறுப்பற்றதனம்..! அப்பாவி இளைஞர்கள் இருவரின் உயிர் பறிபோனது..

மாங்குளம்- துணுக்காய் வடகாடு பகுதியில் நேற்றய தினம் இடம்பெற்ற வீதி விபத்தில் இரு இளைஞா்கள் உயிாிழப்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபையே பிரதான காரணம் என பொதுமக்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனா்.

விபத்து இடம்பெற்ற பகுதியில் வீதியை புனரமைப்பு செய்வதற்காக வீதி அபிவிருத்தி அதிகார சபையினா் பாாிய குழிகளை வெட்டியபோதும், புனரமைப்பும் செய்யாமல், வெட்டிய குழியையும் மூடாமல் இருந்ததே இரு உயிா்கள் அநியாயமாக பறிபோயுள்ளது.

குறித்த வீதி ஏற்கனவே காபற் வீதியாக போடப்பட்ட போதும் அந்த வேலைகள் சீரற்ற நிலையில் இருப்பதால் இடையிடையே வீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் வீதிகளை தோண்டி மீளவும் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இரவு நேரங்களில் சமிக்ஞைகள் போடப்படுவது இல்லை இருப்பினும் இந்த பணிகளை விரைவுபடுத்தாமல் மாதக்கணக்கில் விடுவதால் இவ்வாறான விபத்துக்கள் சம்பாதிப்பதாகவும் இந்த விபத்துக்கள் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின்

அசமந்த போக்கு காரணமாகவே இடம்பெற்று இந்த இரண்டு உயிர்களும் போயிருப்பதாகவும் குற்றம் சுமத்துகின்றனர்.

Sharing is caring!