வெப்ப காலநிலை நீடிக்கும்

நிலவும் அதிக வெப்பத்துடனான வானிலை எதிர்வரும் சில நாட்களுக்கு நீடிக்கும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வடக்கு, கிழக்கு, வட மத்திய, வட மேல் மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் வெப்பத்துடனான வானிலை நிலவும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் மே மாதம் வரையில் வெப்பத்துடனான வானிலை நீடிக்கலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

Sharing is caring!