வெலிக்கடை சிறையில் பெண் கைதி மரணம்

வெலிக்கடை சிறைச்சாலையில் பெண் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாரடைப்பு காரணமாக இந்த கைதி உயிரிழந்திருக்கக்கூடும் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.

வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த 50 வயதான பெண் கைதி ஒருவரே உயிரிழந்துள்ளார்.

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குறித்த பெண் சிறைத்தண்டனை அனுபவித்து வந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!