வெளிநாட்டிற்குள் சட்டவிரோதமான முறையில் நுழைய முற்பட்ட 8 இலங்கையர்கள் கைது

வெளிநாட்டிற்குள் சட்டவிரோதமான முறையில் நுழைய முற்பட்ட 8 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துருக்கி, ஜோர்ஜியா பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 8 இலங்கையர்களும் எஜாரா எல்லையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமான குடியேற்றத்தில் ஈடுபட்ட இலங்கையர்களுக்கு அந்நாட்டு சட்டத்தின்படி 4 அல்லது 5 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்படலாமென அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இலங்கையர்களிடம் ஜோர்ஜியா குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் அவ்வூடகம் குறிப்பிட்டுள்ளது.

Sharing is caring!