வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் நாட்டை வந்தடைந்தனர்

ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிப்பதற்காக 120 வௌிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

7 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி, கண்காணிப்பாளர்கள் வருகை தந்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதனைத் தவிர வெவ்வேறு சர்வதேச அமைப்புகளை சேர்ந்த கண்காணிப்பாளர்களும் நாட்டை வந்தடைந்துள்ளதாக ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அழைப்பிற்கிணங்க, இந்தியா, பூட்டான், மாலைதீவு, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, தென் கொரியா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து கண்காணிப்பாளர்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து சுமார் 60 கண்காணிப்பாளர்கள், கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர்.

Paffrel மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்புக் குழுவைச் சேர்ந்த கண்காணிப்பாளர்கள் அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் கண்காணிப்பில் ஈடுபடவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Sharing is caring!