வெளிநாட்டு பிரமுகர்கள் படையெடுப்பு…?

இலங்கையின் 71ஆவது சுதந்திரதின நிகழ்வில் கலந்துகொள்ள வருகைத்தந்துள்ள, பல நாடுகளின் உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக கண்டியில் தங்கியிருந்த நிலையில், நேற்று (சனிக்கிழமை) அவர்கள் தலதா மாளிகைக்குச் சென்று பார்வையிட்டுள்ளனர்.

இதன்போது தலதா மாளிகையிலுள்ள விஹாரைகளை சுற்றிப்பார்த்த தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள், அங்கு அமைந்துள்ள அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டனர்.

மொரிசியஸ், ருமேனியா, எல்சல்வடோர், எதியோப்பியா, ஜோர்ஜியா, கசகஸ்தான், மாலைத்தீவு, மொரோக்கோ, மொசெம்பிக், ருவண்டா நாடுகளைச் சேர்ந்த உயர்ஸ்தானிகர்கள் மற்றும்  தூதுவர்களே இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த இலங்கைக்கான மொரிசியஸ் உயர்ஸ்தானிகர், இலங்கையின் 71ஆவது சுதந்திரதினத்தில் கலந்துகொள்ளப்போவதையிட்டு மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார்.

அத்தோடு சுதந்திரதின நிகழ்வில் கலந்துகொள்வதன் மூலம் இலங்கை மற்றும் மொரிசியஸ் நாடுகளுக்கிடையிலான உறவு பலப்படுத்தப்படுமென்றும், இந்த நோக்கத்துடனேயே ஏனைய நாடுகளின் உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களும் வருகைத்தந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் வரலாற்று சிறப்புமிக்க இடங்களைப் பார்வையிட கிடைத்தமை தொடர்பாகவும் அவர் மகிழ்ச்சி வெளியிட்டார்.

Sharing is caring!