வெளிநாட்டு வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சீர் செய்ய வேண்டுமாக இருந்தால், வெளிநாட்டு வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைக் கூறினார்.

இந்த டொலர் விலையேற்றமானது எமது நாட்டுக்கு மட்டும் ஏற்பட்டுள்ள பிரச்சினையல்ல. மாறாக உலக நாடுகள் பலதும் இதனை முகம்கொடுத்துதான் இருக்கின்றது. எனவே, நாம் அதனை அதிகமாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. மத்திய வங்கி இதனைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Sharing is caring!