வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கடந்த 7 நாட்களாக முன்னெடுத்த வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நேற்றிரவு சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

எதிர்வரும் 19 ஆம் திகதி, முதலாளிமார் சம்மேளனத்துடன் கலந்துரையாடி பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பள கோரிக்கை தொடர்பில் சிறந்த தீர்வொன்றை பெற்றுத்தருவதாக ஜனாதிபதி உறுதியளித்ததாக, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வேலைநிறுத்தப் போராட்டத்தை நிறுத்துமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்ததாகவும் அதன்படி தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாகவும் ஆறுமுகன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, இன்று முதல் வழமைபோன்று பணிக்கு செல்லுமாறு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அவர் அறிவித்துள்ளார்.

Sharing is caring!