வேலையில்லா பிரச்சினையை தீர்க்க ஒரு தேசிய கொள்கை அவசியம்

நாட்டில் வேலையில்லா பிரச்சினையை தீர்க்க ஒரு தேசிய கொள்கை அவசியம் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி இதனை தெரிவித்தார்.

ஒருவரின் தகுதியின் அடிப்படையில் வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான எந்த ஒரு தேசிய கொள்கையும் நாட்டில் இல்லை எனவும், பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி இதன்போது சுட்டிக்காட்டினார்.

Sharing is caring!