வௌிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 2 கைக்குண்டுகளுடன் ஒருவர் கைது

புறக்கோட்டை, பெஸ்ட்டியன் மாவத்தை பகுதியில் வௌிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 2 கைக்குண்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொனராகலை பகுதியை சேர்ந்த 39 வயதான ஒருவரே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, மாவத்தகம – புசல்லாவ பகுதியிலும் 2 கைக்குண்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிடைத்த தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, வீடொன்றிலிருந்து கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் இன்று (16) நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Sharing is caring!