வௌிநாட்டு பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்

தங்காலை வெல்வத்துகொடை கடற்பரப்பில் நீராடிக்கொண்டிருந்த வௌிநாட்டு பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகபேச்சாளர் அலுவலகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ள ஜேர்மன் நாட்டை சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்துள்ள ஜேர்மன் நாட்டை சேர்ந்தவரின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்ா நிலையில் அவரின் சடலத்தினை அவரது நாட்டுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Sharing is caring!