ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை மறுசீரமைப்பு

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்வது தொடர்பில்  பரிந்துரைகளை முன்வைப்பதற்காக  இராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட குழுவொன்றை நியமித்துள்ளார்.

இக்குழுவில், கலாநிதி ஹர்ஷ த சில்வா, கலாநிதி நந்தலால் வீரசிங்க, கலாநிதி தர்மரத்ன ஹேரத், பேராசிரியர் டீ.பீ.ஜீ.எச் திஸா பண்டார, வீ. கனகசபாபதி, எல்.எஸ்.ஐ ஜயரத்ன, விராஜ் தயாரத்ன, மஹேன் கொபல்லாவ, வசந்த குமாரசிறி, அஜித் அமரசேகர, திசுரி வன்னிஆராச்சி ஆகியோர்  நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தொடர்பில் கடந்த 4 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் அடிப்படையில் குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Sharing is caring!