ஶ்ரீலங்கன் விமான சேவையின் பாதுகாப்பு கணக்காய்வு பதிவேட்டைப் புதுப்பித்துள்ளது

சர்வதேச விமான போக்குவரத்து சங்கம், ஶ்ரீலங்கன் விமான சேவையின் பாதுகாப்பு கணக்காய்வு பதிவேட்டைப் புதுப்பித்துள்ளது.

2020 டிசம்பர் மாதம் 04 ஆம் திகதி வரையான இரண்டு வருட காலத்திற்கு இவ்வாறு புதுப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமான சேவை தெரிவித்துள்ளது.

கடுமையான கணக்காய்வு நடைமுறைகளைப் பின்பற்றி இந்த பதிவேடு புதுப்பிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கன் விமான சேவை சுட்டிக்காட்டியுள்ளது.

ஆசியாவில் பாதுகாப்பு கணக்காய்வு பதிவேட்டில் உள்ளடக்கப்பட்ட முதலாவது விமான சேவை ஶ்ரீலங்கன் விமான சேவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை புதுப்பிக்கப்படுகின்றது.

சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தில் 120 நாடுகள் அங்கம் வகிப்பதுடன், 290 விமான சேவைகள் அங்கத்துவம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!