ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 7 அமைப்பாளர்கள் பதவி நீக்கம்

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 7 அமைப்பாளர்கள் பதவி நீக்கப்பட்டுள்ளனர்.

தேசிய அமைப்பாளர்களாக செயற்பட்ட சுசில் பிரேமஜயந்த, W.D.J. செனவிரத்ன, அனுர பிரியதர்ஷன யாப்பா, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, சந்திம வீரக்கொடி, D.P. ஏக்கநாயக்க, குணரத்ன வீரகோன் ஆகியோர் அமைப்பாளர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (20) இரவு நடைபெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பதவி விலக்கப்பட்ட தேசிய அமைப்பாளர்களுக்குப் பதிலாக புதிய அமைப்பாளர்களை நியமிக்கும் செயற்பாடுகள் இன்று மாலை வேளைக்குள் இடம்பெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.

Sharing is caring!