“ஸ்னைப்பர்” ரக துப்பாக்கி மாயம்

பயங்கரவாத தடுப்புப் பிரிவில் காணப்பட்ட “ஸ்னைப்பர்” ரக துப்பாக்கி ஒன்று காணாமல் போயுள்ளமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் நேற்றைய பாராளுமன்ற அமர்வின் போது கேள்வி எழுப்பினார்.

இவ்வாறு காணாமல் போனதாக கூறப்படும் செய்தி உண்மையா? அவ்வாறு காணாமல் போனமை தொடர்பில் விசாரணைகள் நடாத்தப்படுகின்றதா? இந்த துப்பாக்கியை யார் திருடினார்? என சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டாரவிடம் அவர் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் மத்தும பண்டார,

சம்பவம் தொடர்பில் எழுத்து மூலம் முறைப்பாடு தரப்படுமாயின் அது தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படும் என அமைச்சர் பதிலளித்தார்.

பயங்கரவாத தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி மீது ஜனாதிபதி கொலை சதி குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த துப்பாக்கி குறித்து கேள்வி எழுப்பப்படுவது சர்ச்சைக்குரிய ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!