ஸ்மார்ட் ஆள் அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது

ஸ்மார்ட் ஆள் அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கை இன்று (01) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்தினை மையப்படுத்தி ஸ்மார்ட் ஆள் அடையாள அட்டை தயாரிக்கும் நடவடிக்கை கடந்த டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.

அந்த நடவடிக்கை வெற்றியளித்துள்ளதாகவும் நாடு முழுவதும் இந்த வேலைத்திட்டத்தினை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், ஆட்பதிவுத் திணைக்களத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட புகைப்படப் படப்பிடிப்பு நிலையங்களில் மாத்திரம் புகைப்படம் எடுக்க வேண்டும் என வியானி குணதிலக சுட்டிக்காட்டியுள்ளார்.

Sharing is caring!