ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை விட பின்தங்கியுள்ள ஐக்கிய தேசிய கட்சி

ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியிடம் இரண்டாம் தரத்திற்கு விழுந்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொத்மலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார்.

2015இல் தேசிய அரசாங்கம் அமைத்துக்கொள்ளப்பட்டதன் பின்னர் தமது கனவுகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என அரசாங்கம் எண்ணியது.

எனினும் தற்போது அவ்வாறான ஒரு நிலைமை இல்லை.

இதன் காரணமாக ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி போன்ற புதிய கட்சியை விட பின்தங்கிய நிலைக்குச் சென்றுள்ளது.

இந்தநிலையில் கட்சியை கட்டியெழுப்புவதற்கு முழுமையான முயற்சி எடுக்கப்படும்.

தலைமையுடன் முரண்பட்டேனும் தற்போது காணப்படும் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் எனவும் நவீன் திஸாநாயக்க குறிப்பிட்டார்.

Sharing is caring!