ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ என தான் இதன் பிறகு கூற மாட்டேன் – மேஜர் ஜெனரல் அஜித் பிரசன்ன

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ என தான் இதன் பிறகு கூற மாட்டேன் எனவும், இதற்கு முன்னர் அப்படிக் கூறியதற்காக வருந்துகின்றேன் எனவும் மேஜர் ஜெனரல் அஜித் பிரசன்ன தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் ? என இதுவரையில் எந்தவித தீர்மானமும் எடுப்பதற்கு முன்னர், கடந்த பல ஊடகவியலாளர் சந்திப்புக்களில் நான் அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷதான் என கூறியது தவறானது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்காக தான் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும், இதன்பிறகு எந்த ஊடகவியலாளர் சந்திப்புக்களிலும் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரை இதற்காக பயன்படுத்த மாட்டோன் எனவும் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் மேஜர் அஜித் கூறினார்.

Sharing is caring!