ஸ்ரீ ல.சு.க.யின் அதிகாரிகள் சபைக் கூட்டத்துக்கு 16 பேர் குழுவில் எவரும் இல்லை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றிரவு (02) நடைபெற்ற ஸ்ரீ ல.சு.க.யின் நிருவாக சபைக் கூட்டத்தில் அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேர் கொண்ட குழுவில் எஸ்.பீ. திஸாநாயக்க மட்டுமே அறிவித்தலுடன் சமூகமளிக்காதிருந்ததாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

நிருவாக குழுவில் 16 பேரில் 8 பேர் அங்கத்துவம் வகிப்பதாகவும் இவர்களில் ஆறு பேர் அறிவித்தல்கள் எதுவும் இன்றி சமூகமளிக்க வில்லையெனவும் அவர் கூறியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க அவுஸ்திரேலியாவுக்கான பயணமொன்றை மேற்கொண்டுள்ளதனால் சமூகமளிக்க முடியாதென தெரிவித்திருந்ததாகவும் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

Sharing is caring!