ஹிஸ்புல்லாவின் கருத்துக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ள பிரதமர்

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அண்மையில் தெரிவித்த கருத்து தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் இன்று நடைபெற்ற சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். ஹிஸ்புல்லாவின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இலங்கையின் அடையாளத்தை காப்பாற்றுவது அனைவரதும் கடமை எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம்கள் இலங்கையில் சிறுபான்மை என்றாலும் உலகில் பெரும்பான்மை எனவும் இதனால், எவருக்கும் அஞ்சக் கூடாது எனவும் ஹிஸ்புல்லா குறிப்பிட்டிருந்தார்.

Sharing is caring!