ஹிஸ்புல்லா எம்.பி.யின் இடத்துக்கு ஸ்ரீ ல.சு.க.யின் இளைஞர் அணி தலைவர்

பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டதன் பின்னர் ஏற்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் இடைவெளிக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இளைஞர் அமைப்பின் தலைவர் ஷாந்த பண்டார நியமிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அசாத் சாலி இன்று (04) மேல் மாகாண ஆளுநராக பதவியேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் இந்த தகவலை வெளியிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததன் பின்னரேயே ஆளுநராக நியமிக்கப்பட்டதாகவும் ஆளுனர் அசாத் சாலி மேலும் குறிப்பிட்டார்.

Sharing is caring!