1 கோடி செலவா? எல்லை நிர்ணயம் செய்ய இவ்வளவு செலவா?

எல்லை நிர்ணய அறிக்கையை தயாரிப்பதற்காக ஒரு கோடி ரூபாவுக்கு மேல் செலவானதாக அந்தக் குழுவின் செயலாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கூறுகின்றார்.

எல்லை நிர்ணயம் தொடர்பில் கருத்து மற்றும் யோசனைகளை வழங்குமாறு பாராளுமன்றத்திலுள்ள 225 உறுப்பினர்களுக்கும் பதிவுத் தபால் மூலம் அறிவிக்கப்பட்டிருந்ததுடன்,அனைத்து மாகாண சபை உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள் மாகாண ஆளுனர்கள், மற்றும் செயலாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

பதிவு செய்யப்பட்டுள்ள 70 கட்சிகளின் செயலாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டதுடன் வாய்மூலமாகவோ எழுத்து மூலமாகவோ தமது யோசனைகளை முன்வைக்குமாறு இதன்போது கோரப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

25 மாவட்டங்களிலும் மக்கள் சந்திப்பிற்காக 25 அமைப்புக்கள் உருவாக்கப்பட்டமையை நினைவு கூர்ந்த அவர், அரசியல்வாதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கருத்துத் தெரிவிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டதாகவும். இதற்கமைய 648 யோசனைகள் தமக்கு கிடைக்கப்பெற்றதாகவும் இந்த விடயங்களுக்காக மாத்திரம்16 மில்லியன் வரையில் செலவிடப்பட்டதாகவும் எல்லை நிர்ணய குழுவின் செயலாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கூறுகின்றார்.

Sharing is caring!