10 இலட்சம் இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புகள்

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் கைப்பணித்துறை வலுவூட்டல் வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் 10 இலட்சம் இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படவுள்ளன.

இதற்கான வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

தற்போது இளைஞர், யுவதிகள் பாரம்பரிய கைத்தொழில்களில் ஈடுபடுவது குறைந்து வருவதாகவும் இவர்களை முறையாக சமூகமயப்படுத்துவதன் மூலம் அதிக சம்பளத்துடனான தொழில்களை ஏற்படுத்திக் கொடுக்கமுடியுமெனவும் அவர் கூறினார்.

Sharing is caring!