100 விவசாயக் கிணறுகள் அமைக்கப்படவுள்ளன

வறட்சியால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் விவசாயத்தைத் தடையின்றி மேற்கொள்வதற்காக 100 விவசாயக் கிணறுகள் அமைக்கப்படவுள்ளன.

போதியளவு நீரின்றி விவசாயத்தை மேற்கொள்ள முடியாமல் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில் விவசாய அமைச்சினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.

இந்த விவசாயக் கிணறுகள் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட சில மாகாணங்களில் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!