1000 ட்ரெமடோல் போதைவில்லைகளுடன் ஒருவர் கைது

தம்புத்தேகம பகுதியில் 1000 ட்ரெமடோல் போதைவில்லைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று முற்பகல் 11.45 அளவில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

29 வயதான தம்புத்தேகம பகுதியில் வசிக்கும் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் நாளைய தினம் (08) தம்புத்தேகம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Sharing is caring!