12 வயது சிறுமியொருவரைத் தாயாக்கிய இளைஞர் விளக்கமறியலில்

முல்லைத்தீவு – மல்லாவி பகுதியில் 12 வயது சிறுமியொருவரைத் தாயாக்கிய இளைஞர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

12 வயதான சிறுமி இன்று கிளிநொச்சி வைத்தியசாலையில் குழந்தையொன்றைப் பிரசவித்துள்ளார்.

சிறுமியின் தாய் வழி உறவினர் ஒருவரே சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, 24 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Sharing is caring!