151 பேரின் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மன்னார் மனிதப் புதைகுழியில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளில் 151 பேரின் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மன்னாரில் கடந்த மார்ச் மாதத்தில் சதொச கட்டடம் அமைப்பதற்காக தெரிவு செய்யப்பட்ட காணியில் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.

மன்னார் நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த ​மே மாதம் 28 ஆம் திகதி முதல் அகழ்வுப்பணிகள் இடம்பெற்று வருகின்றன.

அகழ்வுப் பணிகளின் போது மன்னார் வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ஷமிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட சட்ட வைத்திய அதிகாரிகள் குழுவினர் மற்றும் தடயவியல் ஆராய்ச்சிப் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.

Sharing is caring!