2 ஆயிரத்து 500 கிலோகிராம் எடையுடைய போதைப்பொருள்கள் கடந்த மூன்றரை ஆண்டுகளில் மீட்கப்பட்டுள்ளன
2 ஆயிரத்து 500 கிலோகிராம் எடையுடைய போதைப்பொருள்கள் கடந்த மூன்றரை ஆண்டுகளில் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2015ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரையில் இவ்வாறு பெரியளவிலான போதைப் பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.
போதைப்பொருள் குற்றச்செயல் களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் எட்டுப் பேருக்குத் தூக்குத் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.25 ஆயிரம் பேருக்குக் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட் டுள்ளது.புலனாய்வுப் பிரிவு, சிறப்பு அதிரடிப்படை உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புக்களின் மூலமாக போதைப் பொருள்களும், போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மேலும் தெரிவிக்கப்பட்டது.