2019இல் ஊழல் இல்லை

2019 ஆம் ஆண்டை ஊழல் இல்லாமல் சேவையாற்றும் வருடமாக பெயரிட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று காலை தலதா மாளிகைக்கு சென்றிருந்த ஜனாதிபதி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது இதனை குறிப்பிட்டுள்ளார்.

மனசாட்சிக்கு ஏற்ப நேர்மையாக சேவையாற்றுவதனூடாக நாட்டை கட்டியெழுப்பும் சவாலை வெற்றிகொள்ள அனைவரையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

புதிய வருடப்பிறப்புக்காக ஆசி பெற்றுக்கொண்டதாக

இதன்பின்னர் மல்வத்து பீடத்திற்கு சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஶ்ரீ சுமங்கல தேரரிடம் ஆசிர்வாதம் பெற்றுள்ளார்.

Sharing is caring!