2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் இன்று நிறைவேற்றப்பட்டது

தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் யாழ். மாநகர சபையின் 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் இன்று நிறைவேற்றப்பட்டது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆட்சி நிலவும் யாழ். மாநகர சபையின் அமர்வு மாநகர மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் இன்று முற்பகல் கூடியது.

யாழ். மாநகர சபையின் வரவு செலவுத்திட்டம் கடந்த 7 ஆம் திகதி மேயரினால் சமர்ப்பிக்கப்பட்டு, அன்றைய தினமே முதலாம் வாசிப்பு இடம்பெற்றது.

இரண்டாம், மூன்றாம் வசிப்புகள் இன்று இடம்பெற்று வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் 9 உறுப்பினர்கள் வரவு செலவுத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

Sharing is caring!