2019 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தைப் பலப்படுத்த வேண்டும்

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியை அடைவதற்காக 2019 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தைப் பலப்படுத்த வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் கடனைக் குறைத்து, முதலீட்டாளர்கள் தொடர்பிலான நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் 2019 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் அமைய வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் நடவடிக்கைப் பிரிவு பிரதம அதிகாரி மெனுவெலா கொரேடி Daily FT பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் வகையில், அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Sharing is caring!