2019 நான்கு மாதங்களின் இடைக்கால கணக்கறிக்கை அமைச்சரவை அனுமதி

அடுத்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களின் செலவிற்கான தயார் செய்யப்பட்ட இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

1735 பில்லியன் ரூபா இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர், அமைச்சர் மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார்.

Sharing is caring!