22 ஆயிரம் சிகரட்டுக்களுடன் இளைஞர் ஒருவர் கைது

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 22 ஆயிரம் சிகரட்டுக்களுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

துறைமுக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, வேனொன்றை சோதனையிட்ட போது, சிகரட் தொகை குற்றத்தடுப்பு பிரிவினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கொட்டாஞ்சேனையை சேர்ந்த 29 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இன்று நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Sharing is caring!