27 ஆம் திகதி முதல் 6 மணி நேர மின்சாரத் தடை

மின்சாரக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் காரணமாக எதிர்வரும் ஜூலை மாதம் 27 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை கொழும்பின் சில பகுதிகளுக்கு மின்சாரத் தடை ஏற்படும் என மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனால், கொழும்பு 03, 04, 05, 07 மற்றும் 08 ஆகிய பகுதிகளுக்கு ஜூலை 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை மின்சாரத் தடை ஏற்படும் எனவும் அறிவித்துள்ளது.

Sharing is caring!