28 ஆவது சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சி

28 ஆவது சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சி அடுத்த மாதம் கொழும்பில் நடைபெறவுள்ளது.

இந்த கண்காட்சி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆகஸ்ட் மாதம் 30 ம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இந்த கண்காட்சி மூலம் நாட்டின் பல்வேறு தரங்களிலுமுள்ள உள்நாட்டுக் கைத்தொழிலை ஒரே மேடைக்குக் கொண்டு வரும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சிக்கு இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையும், ஏற்றுமதி அபிவிருத்தி சபையும் அனுசரணை வழங்குவதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.

Sharing is caring!