29 தனிவீடுகள், பெருந்தோட்ட பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன

களுத்துறை மாவட்டத்தில் அரபொலகந்த தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட 29 தனிவீடுகள், பெருந்தோட்ட பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன. இதுதொடர்பான நிகழ்வு நேற்று இடம்பெற்றது.இந்த வீடுகளை சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன பயனாளிகளிடம் வீடுகளை கையளித்தார்.

மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு இரண்டு கோடி 90 இலட்ச ரூபா செலவில் இந்த வீடுகளை அமைத்துள்ளது. ஒவ்வொரு வீடும் தலா 7 பேர்ச் காணியில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வின் போது 10 இலட்சம் ரூபா செலவில் கொங்கீரிட் இடப்பட்டு சீர்செய்யப்பட்ட பாதையும் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் பின்னகொட வித்தான, மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ரஞ்சினி நடராஜபிள்ளை மற்றும் மனிதவள நிதியத்தின் தலைவர் புத்திரசிகாமணி உட்பட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Sharing is caring!