36 இலட்சம் ரூபா பெறுமதியான ”ஐஸ்” எனப்படும் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில், 36 இலட்சம் ரூபா பெறுமதியான ”ஐஸ்” எனப்படும் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

300 கிராம் போதைப்பொருளுடன், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

சென்னையிலிருந்து நேற்றிரவு வந்த சந்தேகநபர் உள்ளாடைக்குள் சூட்சுமமான முறையில் மறைத்து போதைப்பொருளை கொண்டுவருவதற்கு முயற்சித்துள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

சட்டவிரோதாமாக சிகரெட் தொகையுடன் 2017ஆம் ஆண்டிலும் கைது செய்யப்பட்டிருந்த இவர், நீண்டகாலமாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவராக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 7 நாட்கள் தடுத்துவைத்து விசாரிப்பதற்கான உத்தரவைப் பெற எதிர்பார்ப்பதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Sharing is caring!