40 ஆவது தேசிய இளைஞர் விருது வழங்கல் விழா

40 ஆவது தேசிய இளைஞர் விருது வழங்கல் விழா நேற்று (28) நடைபெற்றது.

கொழும்பு தாமரைத் தடாகத்தில் இந்த விருது வழங்கும் விழா நடைபெற்றது.

புத்தசாசனம் – மத விவகாரங்களுக்கான அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவை என்பன இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

110 கலைத்துறைகளில் ஆற்றல்களை வௌிப்படுத்திய 160 இளம் கலைஞர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.

விருது வழங்கல் விழாவில் சில அமைச்சர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

விருதுகளுக்காக தெரிவு செய்யப்பட்ட இரண்டு வெற்றியாளர்கள் தங்களின் விருதுகளை அரசியல்வாதிகளிடமிருந்து பெற்றுக்கொள்ள மேடையில் வைத்து மறுப்புத் தெரிவித்தனர்.

சிறந்த குறுநாடகத்திற்கான விருதை தன்வசப்படுத்திக்கொண்ட சுரேன் சாமிகர மற்றும் கசுன் சத்துரங்க ஆகிய இளம் கலைஞர்களே அரசியல்வாதிகளிடமிருந்து விருதுகளைப் பெற மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

Sharing is caring!