40 இலட்சம் ரூபா பண மோசடி பின்னணியில் அதிரவைக்கும் காரணம்

வேலை வாங்கித்தருவதாகக் கூறி சுமார் 40 இலட்சம் ரூபா பணத்தை பெற்று மோசடி செய்த இருவர் கடவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடவத்தை பகுதியில் நிறுவனம் ஒன்றை நடத்திச்சென்ற இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

கிரிபத்கொடை பொலிஸாரிற்கு கிடைத்த தகவலை அடுத்தே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கப்பலில் வேலைவாய்ப்பு வாங்கித்தருவதாகக் கூறி நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 19 பேரிடம் இருந்து 39 இலட்சத்து 97 ஆயிரத்திற்கும் அதிகமான பணத்தை சந்தேக நபர்கள் பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரம்புக்கன மற்றும் மாவனெல்ல பகுதியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை இன்று (05) மஹரகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!