50 அதிகாரிகளுக்கு விரைவில் இடமாற்றம்

நீண்டகாலமாக சிறைச்சாலையில் இடம்பெற்று வந்த முறைகேடுகளை மட்டுப்படுத்தும் நோக்கில் அடுத்து வரும் வாரங்களில் 50 இற்கும் மேற்பட்ட சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரல தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுடன் சிறைச்சாலையில் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்த அதிகாரிகளே இவ்வாறு இடமாற்றம் செய்யப்படவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவினரைக் கலைத்தமை குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Sharing is caring!