50 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும்

வடக்கு, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் 150 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

சில பகுதிகளில் 100 மில்லிமீட்டர் வரை மழை பெய்யலாம் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்த மழையினால் தாழ்நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

இதேவேளை, கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்குட்பட்ட பகுதியில் தொடரும் மழையுடனான வானிலையால் வயல் நிலங்கள் நீரில் மூழ்கிக் காட்சியளிக்கின்றன.

இரணைமடு குளத்தின் நீர் மட்டம் 32 அடியாக உயர்வடைந்துள்ளது.

Sharing is caring!