500 நாள்­க­ளுக்கு மேலா­கப் போரா­டி­வ­ரும், காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வு­க­ளுக்கு ஆத­ரவு

வடக்கு -– கிழக்கு மாகா­ணங்­க­ளில் 500 நாள்­க­ளுக்கு மேலா­கப் போரா­டி­வ­ரும், காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வு­க­ளுக்கு ஆத­ரவு தெரி­வித்து, கொழும்பு விகா­ர­மா­தேவி பூங்­கா­வில் தாமரை தடாக கலை­ய­ரங்­குக்கு முன் இன்று மாலை 4 மணி­யி­லி­ருந்து இரவு 11.30 மணி வரை கவ­ன­யீர்ப்­புப் போராட்­டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது.

கிளி­நொச்­சி­யில் முன்­னெ­டுக்­கப்­ப­டும் போராட்­டம் 510 நாள்­க­ளை­யும், வவு­னி­யாப் போராட்­டம் 503 நாள்­க­ளை­யும், முல்­லைத்­தீ­வுப் போராட்­டம் 492 நாள்­க­ளை­யும், யாழ்ப்­பா­ணம் போராட்­டம் 483 நாள்­க­ளை­யும், திரு­கோ­ண­ம­லைப் போராட்­டம் 498 நாள்­க­ளை­யும் எட்­டி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

Sharing is caring!