6வது உலக வனாந்தர வார மாநாட்டில் உரை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இத்தாலியின் ரோம் நகரில் 6வது உலக வனாந்தர வார மாநாட்டில் உரையாற்ற உள்ளார்.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காகவும், உலக வனப்பாதுகாப்புக் குழுவின் 24வது கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இத்தாலியின் ரோம் நகருக்கு பயணமாகியுள்ளார்.

இம்முறை மாநாட்டின் தொனிப்பொருள் நிலைபேறான அபிவிருத்தி இலக்கை அடைவதற்கு வனாந்தரத்தின் மூலம் பெற்றுக் கொள்ளக்கூடிய பங்களிப்பைக் கண்டறிவதாகும். இந்த சர்வதேச மாநாடு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்முறை மாநாட்டில் விசேட உரையை நிகழ்த்துமாறு ஜனாதிபதிக்கு ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்திருந்தது. ஜனாதிபதி சுற்றாடலைப் பாதுகாப்பதற்கு வழங்கும் பங்களிப்பும் சுற்றாடல் தொடர்பில் அவரிடம் இருக்கும் தூர இலக்கும் இந்த விசேட உரை வழங்கப்படுவதற்கான காரணமாக அமைந்துள்ளது.

Sharing is caring!