6 ஆவது மாநாடு இன்று

சர்வதேச நகரங்கள் தொடர்பான 6 ஆவது மாநாடு இன்று சிங்கப்பூரில் ஆரம்பமாகவுள்ளது.

உற்பத்தி மற்றும் புரிந்துணர்வின் மூலம் எதிர்காலத்திற்கு பொருத்தமான நிலைபேறான நகரத்தை உருவாக்குதல் என்பதே இந்த மாட்டின் தொனிப்பொருளாகும்.

6 ஆவது சர்வதேச நகரங்கள் தொடர்பான மாநாடு மற்றும் அதனுடன் இணைந்ததாக நடைபெறவுள்ள சிங்கப்பூர் சர்வதேச வார நிகழ்வில் கலந்துகொள்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று சிங்கப்பூருக்கு விஜயம் செய்துள்ளார்.

பிரதமர் உள்ளிட்ட 15 பேர் கொண்ட தூதுக்குழுவில் அமைச்சர்கள் சஜித் பிரேமதாச, மலிக் சமரவிக்ரம, ரவூப் ஹக்கீம் உள்ளிட்டோர் அடங்குகின்றனர்.

இந்த விஜயத்தின்போது சிங்கப்பூர் பிரதமர் லீ சின் லுங் தலைமையிலான அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்களுடன் பிரதமர், பேச்சுவார்த்தை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நகரங்கள் தொடர்பான மாநாட்டின் ஆரம்ப கூட்டத் தொடரில் நகர அபிவிருத்தி சுற்றாடலை பாதுகாத்தல் என்ற தொனிப்பொருளில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று உரை நிகழ்த்தவுள்ளார்.

Sharing is caring!