67 சோடி மாட்டு வண்டில்களுடன் இமாலய நிறைவுகண்டது மாட்டுவண்டில் சவாரிப்போட்டி!

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் 5வது ஆண்டுவிழாவை முன்னிட்டு நடாத்திய தங்கபதக்கத்திற்கான மாட்டுவண்டில் சவாரிப்போட்டி (22-07-2018) ஞாயிற்றுக்கிழமை நீர்வேலி சவாரி விடந்தையில் விறுவிறுப்பாக இடம்பெற்றது! முல்லைத்தீவு, கிளிநொச்சி,மன்னார் முதலான வெளிமாவட்டங்களில் இருந்தும் மொத்தமாக 67 சோடி மாட்டுவண்டில்கள் போட்டியில் கலந்துகொண்டன! A,B,C,D என நான்கு பிரிவுகளாக இடம்பெற்ற இப்போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் 1ம் இடம்பெற்ற காளை உரிமையாளர்களுக்கு தங்கபதக்கம் வழங்கி கௌரவிக்கபட்டதுடன், ஏனைய 2ம்,3ம்,4ம் இடங்களை பெற்ற வெற்றியாளர்களுக்கு பெறுமதியான பரிசில்கள் வழங்கப்பட்டன!

Sharing is caring!