7 வருடங்களாக அமைத்த சர்வதேச விளையாட்டு மைதானம்….

கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளில் கட்டி முடிப்பதாக ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச விளையாட்டு மைதானம் ஏழு ஆண்டுகள் கடந்த நிலையில் 17ம் திகதி திறக் கப்படுகிறது. அதன் தரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என மாவட்ட இளைஞர் கழக ங்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு சர்வதேச விளையாட்டு மைதானம் 200 மில்லியன் ரூபாவில் அமைப்பதாக திட்டமிடப்பட்டு அதன் பணிகள் மகிந்த அரசின் ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இதற்காக முதல் கட்டமாக 50 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு 2012ம் ஆண்டு முதல்கட்ட பணிகள்

ஆரம்பித்த நிலையில் இதே பெறுமதியில் அநுராதபுரம் மாவட்டத்திலும் ஓர் விளையாட்டு மைதானம் ஆரம்பிக்கப்பட்டது. இவை இரண்டிற்கும் அனுமதிக்கப்பட்ட நிதி போதாமை ஏற்பட்ட நிலையில் அப்போதைய விளையாட்டு அமைச்சரும் அநுராதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்ற வகையில்

எமது மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்த எஞ்சிய நிதியினையும் இரகசியமான முறையில் திருட்டுத்தனமாக அநுராதபுரம் மாவட்டத்திற்கே கொண்டு சென்றுவிட்டார். இதனால் எமது மாவட்ட விளையாட்டு அரங்கின் பணிகள் முழுமையாக தடைப்பட்டது.

இந்த நிலையில் தொடர்ந்தும் எழுந்த குரலை அடுத்து பகுதி பகுதியாக 7 ஆண்டுகளாக கட்டிமுடிக்கப்பட்ட விளையாட்டு அரங்கு தற்போது பணிகள் முடிவுற்றதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் எதிர்வரும் 17ம் திகதி திறப்புவிழா இடம்பெறவுள்ளபோதும்.

7 ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி முழுமையான கண்காணிப்பு முறையான பணித்தொகுதிகள் இன்றி இடையில் இராணுவத்தினரே பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். எனவே ஓர் சுயாதீன பொறியியலாளர் குழுவை நியமித்து அதன் மூலம் தரத்தினை உறுதி செய்த பின்பே அங்கே

விளையாட்டுகளிற்கு அனுமதிக்கப்பட வேண்டும். இல்லாதவிடத்தில் அங்கே ஓர் அசம்பாவிதம் ஏற்பட்டால் இதனை ஆரம்பித்து வைக்கும் அதிகாரிகளே பொறுப் பேற்க வேண்டும். எனத் தெரிவிக்கின்றனர். இவ்வாறு தெரிவிக்கப்படும் கருத்து தொடர்பில் மாவட்டச் செயலாளரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது ,

இளைஞர் கழகங்களின் ஐயமும் நியாயமானது. இருப்பினும் விளையாட்டுத்துறை அமைச்சு அதன் தரம் தொடர்பில் உரிய கவனம் செலுத்தியே அமைப்பார்கள். இருப் பினும் இளைஞர்கள் வேண்டுவதனால் குறித்த மைமானம் எம்மிடம் கையளிக்கப் பட்ட பின்பும் ஒருதடவை மாவட்டச்

செயலக பொறியியலாளர்கள் மூலம் தரத்தினை உறுதி செய்துகொள்ள முடியும். என்றார்.

Sharing is caring!