7.6 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியில் மகிந்தவைச் சீனா விலைக்கு வாங்கியது!!

7.6 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கொடுத்து முன்னாள் அரசதலைவர் மகிந்த ராஜபக்சவை சீனா விலைக்கு வாங்கியது என்று மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

தனி நப­ரின் கைக­ளில் இருக்­கும் தன்­னிச்­சை­யான அதி­கா­ரங்­கள் கார­ண­மா­கவே சீனா அவ்­வாறு விலை கொடுத்து வாங்­கி­யது என்­றும் அவர் தெரி­வித்­துள்­ளார்.கொழும்­பில் அண்­மை­யில் நடை­பெற்ற நிகழ்வு ஒன்­றில் உரை­யாற்­றும் போது அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

தனி நப­ரி­டம் இருக்­கும் இந்த நிறை­வேற்று அதி­கா­ரத்தை ஒழிக்க 20ஆவது அர­ச­மைப்­புத் திருத்­தச் சட்­டத்தை நிறை­வேற்ற வேண்­டும்.சிலர் தனிப்­பட்ட நோக்­கங்­களை நிறைவேற்­றிக்­கொள்­ளும் நோக்­கில் 20ஆவது அர­சி­ய­ல­மைப்­புத் திருத்­தச் சட்­டம் குறித்­துப் பொய்­யான பூச்­சாண்­டி­களை உரு­வ­கப்­ப­டுத்தி வரு­கின்­ற­னர்.
இத­னைத் தோற்­க­டிக்க மக்­க­ளுக்கு அது தொடர்­பில் விளக்­க­ம­ளிக்­கப்­ப­டும் என்­றும் அவர் மேலும் தெரி­வித்­துள்­ளார்.

Sharing is caring!