70 முதல் 75 வீதமான மக்களின் தேவை ரணில் பதவி நீங்குதல்

ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்குவதற்கு, இந்நாட்டின் 70 முதல் 75 வீதமான மக்களுக்குத் தேவையாக இருந்தாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராஜதந்திர அதிகாரிகளை சந்தித்து கூறியுள்ளதாக ‘த ஹிந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.

அதனை பொதுமக்களின் புன்னகையிலிருந்து புரிந்துகொள்ளுமாறும் வெளிநாட்டு இராதந்திர அதிகாரிகளிடம் ஜனாதிபதி கோரியுள்ளார்.

தமது அமைச்சரவையை சாதாரண நிலைமைக்குக் கொண்டுவரல் மற்றும் வரவுசெலவுத் திட்டத்தைத் தயாரிப்பதற்கு கால அவகாசம் தேவை என்பதனாலே எதிர்வரும் 16ஆம் திகதி வரை பாராளுமன்றம் ஒத்துவைக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி கூறியதாக ‘த ஹிந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.

பாராளுமன்றத்தை விரைவில் கூட்டுமாறு மேலைத்தேய இராஜாந்திர அதிகாரிகள் இதன்போது ஜனாதிபதியிடம் கோரியுள்ளதாகவும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்பிற்கு தான் முழுமையாக பொறுப்புப் கூறுவதாகவும் எவ்வித வன்முறை சம்பங்களும் இடம்பெற இடமளிப்பதில்லை எனவும் ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டுள்ளாகவும் ‘த ஹிந்து’ வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Sharing is caring!